சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இணங்கிய 10 நிபந்தனைகள்!
இலங்கை கடன் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய 10 நிபந்தனைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் ஜனாதிபதி குறித்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதன்படி குறித்த 10 நிபந்தனைகளும் பின்வருமாறு.
1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல்.
2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு.
5. 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்.
6. 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12% – 18% ஆகக் குறைத்தல்.
7. 2023 ஜூன் இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல்.
8. அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.
9. மத்திய வங்கி மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
10. வலுவான சமூக பாதுகாப்பு வலை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.