யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை! வெளியான புதிய தகவல்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை முடிவுற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்று கலந்துரையாடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது செயலாளர் இதனை தெரிவித்தார்.
தற்பொழுது உள்ள பொருளாதார நிலைமையினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாங்கள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மாணி பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏக மனதாக தீர்மானித்துள்ளோம் என செயலாளர் தெரிவித்தார்
(Visited 10 times, 1 visits today)