பிரபல ரஷ்ய பெண் பத்திரிகையாளரைத் தாக்கி மொட்டை அடித்து கொடூரம்!
ரஷ்யாவின் செச்சன்யா குடியரசின் வருகையின்போது பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் பிரபல பெண் பத்திரிகையாளர் யெலினா மிலாஷினா மற்றும் வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் நெமோவ் ஆகியோர், செச்சென் தலைநகர் Groznyக்கு வருகை தந்தனர்.
செச்சென் ஆர்வலரின் தாயாரின் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ள அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில், ஆயுதமேந்திய குழு ஒன்றால் அவர்களின் கார் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அந்த குழு மிலாஷினா மற்றும் நெமோவ்வை துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டி பலமாக தாக்கியுள்ளது. மேலும், மிலாஷினாவின் தலையை தாக்குதல்தாரிகள் மொட்டையடித்து, பச்சை நிற சாயத்தினை பூசியுள்ளது.
அத்துடன் அவர்கள் வைத்திருந்த தனிப்பட்ட மின்னணு சாதனங்களையும் அந்த கும்பல் கைப்பற்றி அழித்ததாக CAT கூறியது. இந்த தாக்குதலுக்கு பின்னர் மிலாஷினா மற்றும் வழக்கறிஞர் நெமோவ் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.