கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்கச் சென்ற மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு!
தமிழகம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமத்தில் விபத்தில் சிக்கி, கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்கச் சென்ற மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுவர்கள் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த.போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் 3 பேரும் வீதி ஓரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர்.
சிறுவர்கால் பயணம் செய்த வாகனத்தின் பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த குப்புசாமி (58), அசோக்குமார் (38), சரவணன் (35) ஆகிய 3 பேரும், சிறுவர்களை காப்பற்றுவதற்கு கிணற்றுக்குள் குதித்துள்ளனர்.
தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதில் சிறுவர்களான அபினேஷ் (15), நிதீஷ்குமார் (15), ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் சிறுவன் விக்னேஷ் (13) மட்டுமின்றி சிறுவர்களை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த குப்புசாமி, அசோக் குமார், சரவணன் ஆகிய 3 பேரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த ராசிபுரம் பொலிஸார், தீயணைப்புதுறையினரின் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் 4 பேரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.