அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் – நால்வர் பலி

அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் இன்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)