கால்பந்து வீரர் நெய்மருக்கு முழு சொத்துக்களையும் எழுதி வைத்த ரசிகர்!

பிரேசிலில் கால்பந்து வீரர் நெய்மருக்கு ரசிகர் ஒருவர் தமது முழு சொத்துக்களையும் கொடுக்கவுள்ளார்.
தனது மரணத்துக்குப் பின் சொத்தெல்லாம் நெய்மருக்குச் செல்லவேண்டும் என்று 30 வயது ரசிகர் ஒருவர் உயிலில் எழுதியுள்ளார்.
“எனக்கு நெய்மரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் ஒற்றுமைகள் பல உள்ளன. நானும் அவரும் குடும்பத்தைச் சார்ந்து இருப்பவர்கள். நெய்மாருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையிலான உறவு எனக்கும் என் காலஞ்சென்ற தந்தைக்கும் இருந்த உறவை நினைவுபடுத்துகிறது” என குறித்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்தை விட்டுச் செல்வதற்கு யாருமில்லாத நிலையில் அவ்வாறு முடிவெடுத்ததாக ரசிகர் கூறினார்.
Paris St Germain காற்பந்துக் குழுவைச் சேர்ந்த நெய்மர், உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)