காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாதவை – அறிந்திருக்க வேண்டியவை
ஒவ்வொரு நாளும் நாம் தூங்கி எழுந்த பிறகு ஒரு புதிய புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது.
மேலும், எழுந்த உடன் இந்த நாள் எப்படி அமையும் என்பது குறித்து பலவித எதிர்பார்ப்புகள் ஏற்படும்.
அதன் காரணமாக நாம் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை செய்யக்கூடாது. அதிலும் குறிப்பாக காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்க்க கூடாது.
ஏனென்றால் செல்போனில் அதிர்ச்சி தரும் செய்திகளை பார்த்தால் காலையிலேயே உடலுக்கும், மனதுக்கும் சோர்வை ஏற்படுத்தும்.
இந்த தாக்கம் அந்த நாள் முழுவதும் இருக்கும் என்பதால் செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், அதன் தாக்கம் அன்றைய நாள் முழுவதும் தொடரும். அந்த வகையில் நாம் வேலை பார்க்கும் இடத்தில் அல்லது முக்கியமாக வெளியே செல்லும் இடத்தில் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுதல், கோபம் கொள்ளுதல் என அந்நாள் முழுவதும் மனச்சோர்வை ஏற்படுத்தும்.