இலங்கை

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கு ரயில் மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருத்த வேலைகள் முடிந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசன பதிகள் உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்தார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!