இரத்தம் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய விடயம்!
மனிதரில் உள்ள குருதி நான்கு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. A, B, AB, O என்பனவே அவையாகும். ஒரு இனக் குருதி உள்ளவருக்கு அதே இனக் குருதியை தான் செலுத்த முடியும்.
AB இனக் குருதியை உடையவருக்கு எந்த வகைக் குருதியையும் செலுத்த முடியும். இவர் பொது வாங்கி எனப்படுவார். ஆனால், இவரின் குருதியை AB இனக் குருதியை உடையவருக்கு மட்டுமே வழங்க முடியும்.
O இனக் குருதியை உடையவரின் குருதியை எல்லா இனக் குருதி உடையவர்களுக்கும் செலுத்த முடியும். இவர் பொது வழங்கி எனப்படுவார். ஆனால், இவருக்கு O இனக் குருதியை மட்டுமே செலுத்த முடியும்.
குருதி இனம் மட்டுமன்றி குருதி வகையும் கவனிக்கப்பட வேண்டும். Rh Neh, Rh எதிர் என இரு வகைக் குருதியுண்டு. முதல் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது இவ்வகையைக் கவனிக்காது விடலாம்.
ஆனால், இரண்டாம் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது அல்லது கர்ப்பமுற்றோர், பிள்ளை பெற்ற பெண்கள் போன்றவர்களுக்கு முதல் முறை குருதிப் பாய்ச்சுதல் செய்யும்போது இவ்வகைகளை கவனிக்க வேண்டும்.