ஹரின் பெர்னாண்டோவிற்கு புதிய பதவி
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, 2023 முதல் 2025 வரை ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) தெற்காசிய ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்ற தெற்காசியாவுக்கான UNWTO கமிஷனின் (CSA) 59வது கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், இலங்கை சுற்றுலா மற்றும் நிலைத்தன்மைக்கான குழுவின் (CTS) பிரதிநிதியாகவும் ஒரே நேரத்தில் துணைத் தலைவர் பதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 16 முதல் 20 வரை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெறவுள்ள UNWTOவின் 25வது பொதுச் சபையில் இந்த நியமனத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் நடைபெறும்.
“இந்த மதிப்பிற்குரிய நியமனத்தை பெற்றுக் கொள்வதில் இலங்கை சுற்றுலாத்துறை பெருமிதம் கொள்கிறது மற்றும் தெற்காசியாவில் சுற்றுலா வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வளர்ப்பதற்கு துணைத் தலைவராக அதன் பங்கை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சரின் தலைமையில், சுற்றுலாத்துறையானது UNWTO மற்றும் உறுப்பு நாடுகளுடன் ஒத்துழைத்து பிராந்தியத்தில் ஒரு செழிப்பான மற்றும் பொறுப்பான சுற்றுலா நிலப்பரப்பை உருவாக்குவதற்கு எதிர்நோக்குகிறது” என்று இலங்கை சுற்றுலாத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.