எம்பிலிப்பிட்டியவில் 1227 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

எம்பிலிப்பிட்டியவில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1,227 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 மற்றும் 39 வயதுடைய இரண்டு சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவரும் கஞ்சா பொதிகளை ஏற்றிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைப்பற்றல் இலங்கையில் இதுவரை கஞ்சாவை கைப்பற்றியதில் மிகப் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)