ஐரோப்பா

பிரித்தானியாவில் 34 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

பிரித்தானிய மக்கள் தற்போது வெப்ப அலை போன்ற சூழலை அனுபவித்துவரும் நிலையில், நாட்டின் 34 பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடனடியாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள யார்க்ஷயர் மற்றும் வடகிழக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் முகமை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.ஜூன் 18 சனிக்கிழமை, நாடு முழுவதும் பல வானிலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன, அத்துடன் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இடியுடன் மழையும் பெய்ய இருப்பதால், நதியில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கலாம் எனவும், இது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.ஓகன்ஷாவில் ஹன்ஸ்வொர்த் பெக்கைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், தங்களது குழுவினர் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Flood warning issued with huge thunderstorms to smash UK as residents told  'ACT NOW' - Mirror Online

மேலும், ஆறுகளுக்கு அருகில் தாழ்வான சாலைகளைத் தவிர்க்க, வாகனம் ஓட்டும் வழிகளைத் திட்டமிட வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தற்போது 34 பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பெருவெள்ளம் ஏற்பட இருக்கிறது என முடிவு செய்து, உடனடியாக செயல்பட வேண்டும் எனவும், உரிய தயாரிப்புகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்கள் வாகனங்களை உயரமான பிரதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், குடும்பத்தினர் வளர்ப்பு பிராணிகளையும் பத்திரமாக இடம் மாற்ற வேண்டும். முக்கியமான பொருட்களை உங்கள் குடியிருப்பிலேயே முதல் மாடிக்கு மாற்றப்பட வேண்டும்.எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மூடிவிட வேண்டும். தண்ணீரில் நின்று கொண்டே, மின் பொருட்களை தொட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்