வர வர கவர்ச்சி அள்ளுதே… குட்டிப்பொண்ணு ஷிவாங்கியா இது?
BY MP
June 19, 2023
0
Comments
371 Views
photos - sivaangi.krish instagram
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் சிவாங்கி.
இவரது குழந்தை தனமான பேச்சும், குறும்புத்தனங்களும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக முக்கியமான பங்கை பெற்று வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் குக்காக மாறி, பைனல் போட்டியாளராகவும் தேர்வாகியுள்ளார் சிவாங்கி. இவர் டைட்டிலை வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சில விமர்சனங்களை பெற்றாலும் ஒன்றுமே தெரியாமல் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, தற்போது தன்னுடைய சமையல் திறமை மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
சில இம்யூனிட்டி ரவுண்ட்களிலும் சிறப்பாக சமைத்த சிவாங்கி, நடுவர்களை வெகுவாக கவர்ந்து இம்யூனிட்டி பேண்ட்களை பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் முதல் பைனல் போட்டியாளராகவும் தேர்வாகியிருந்தார்.
இந்த நிலையில் பல சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் இவர் அந்த புகைபபடங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்.
இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு கியூட்டாக இருப்பதாக ஒரு தரப்பினரும், வரவர கவர்ச்சி கூடுதே என்றும் சிலர் கூறுகின்றனர்.