ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வரவுள்ள புதிய திட்டம் – வீடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜெர்மனி நாட்டின் வர்த்தக துறை அமைச்சர் முன்வைத்த கோரிக்கை செயற்பாடுகள் தொடர்பாக முறுகல் ஏற்பட்டிருந்தது.

தற்பொழுது குறித்த கோரிக்கை தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியின் குறிப்பாக பசுமை கட்சியினுடைய வர்த்தக அமைச்சரான ரொபட் ஹாபேர் புதிய வெப்ப மூட்டிகளை வீடுகளில் உள்ளவர்கள் கட்டமைப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று வேண்டுதலை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் இவரது கருத்துக்கு எதிராக ஆளும் கூட்டு கட்சியின் பிரதான மற்றுமொரு பங்காளி கட்சியான FDP கட்சியானது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றது. மேலும் பிரதான எதிர்கட்சியான CDUCSU கட்சியும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தந்பொழுது ஆளும் கூட்டு கட்சிகளிடையே இந்த விடயம் தொடர்பில் ஓர் இணக்கப்பாடு காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இதன் படி 65 வீதமான சுற்றுப்புற சூழலை பாதுகாக்க கூடிய எரிபொருளை பயன்படுத்துகின்ற வெப்ப மூட்டிகளை எதிர் வரும் காலங்களில் கட்டமைப்புக்குள்ளாக்க வேண்டும் என்ற திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த புதிய சட்டத்தின் மூலம் பல பொது இடங்களில் உள்ள வெப்ப மூட்டிகளை மாற்ற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளதால் ஜெர்மன் அரசாங்கமானது 2040 ஆம் ஆண்டு அளவில் கிளிமாநொய்ட் என்று சொல்லப்படுகின்ற சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து இல்லாத எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்ற இவ்வகையான திருத்தத்தை கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்