F16 விமானங்களை கோரும் உக்ரைன் : பயிற்சிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை!
நெதர்லாந்து மற்றும் டென்மார்க் தலைமையிலான போர் விமானப் பயிற்சித் திட்டம், இந்த கோடையில் ஆரம்பமாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் இணைவதற்காக உக்ரைன் சார்பில் பல விமானிகள் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட்”முடிந்தவரை விரைவில் தொடங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வான் மேன்மையை எதிர்த்துப் போராடுவதற்கு உக்ரைன் நீண்டகாலமாக நவீன விமானங்களை கோரி வருகிறது.
டஜன் கணக்கான F16 களை வழங்குவதற்கான Kyiv இன் கோரிக்கையின் மீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க்கை உள்ளடக்கிய இந்த திட்டத்திற்கு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வழங்கியுள்ளன.