கிரீஸில் கவிழ்ந்த படகு – அதிகரிக்கும் மரணங்கள் – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்
கிரீஸில் குடியேறிகளை ஏற்றியிருந்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காப்பாற்றப்பட்ட சுமார் 100 பேர் நிலப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். தேடல் மீட்புப் பணி தொடர்கிறது.
ஐரோப்பாவில் இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் ஆக மோசமான படகு விபத்து அதுவாகும். அனைத்துலகக் கடற்பகுதியில் அந்த மீன்பிடிப் படகு செவ்வாய்க்கிழமை காணப்பட்டதாக உள்ளூர்க் கடலோரக் காவற்படை கூறியது.
படகு, உதவியை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இயந்திரம் செயலிழந்த சிறிது நேரத்தில் படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்தது.
காப்பாற்றப்பட்ட பலருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர்கள் படகு உடைந்து சிதறிய இடிபாடுகளைப் பிடித்துக்கொண்டிருந்தனர் என்றும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.
படகில் இருந்த எவரும் உயிர்காப்பு உடையை அணிந்திருக்கவில்லை. படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பதும் தெரியவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.