4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் ஒட்டிப் பிறந்த குழந்தை!
பீகாரில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டம், சாப்ராவில் உள்ள சஞ்சீவானி முதியோர் இல்லத்தில் நேற்று பிரசுதா பிரியா தேவி என்ற பெண்ணிற்கு பெண் குழந்தையொன்று பிறந்தது.நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் நான்கு காதுகளுடன் பிறந்த அக்குழந்தையை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.ஆனால் ஒரே ஒரு முதுகு தண்டு மற்றும் ஒரு தலை மட்டுமே இருந்தது.
இக்குழந்தை குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அனில் குமார் பேசுகையில்,பிரசுதா பிரியா தேவிக்கு ஒரு தலை, நான்கு காதுகள், நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகள், இரண்டு முள்ளந்தண்டு வடங்கள் கொண்ட குழந்தை பிறந்தது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அக்குழந்தையின் மார்பில் 2 துடிக்கும் இதயங்கள் இருந்தன. பிறந்த அந்தக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக 20 நிமிடங்களுக்குப் பிறகு இறந்தது.
இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடக்கும். ஒரு பெண்ணின் கருப்பையில் ஒரு முட்டையிலிருந்து 2 குழந்தைகள் உருவாகும்போது, சில காரணங்களால் இரட்டைக் குழந்தைகள் பிரிவதில் தாமதம் ஏற்பட்டாலோ, அந்த முட்டைக் கரு முழுமை அடையாமல் இருந்தாலோ இதுபோன்று வித்தியாசமான குழந்தைகள் பிறக்கும் என்றார்.
இந்தச் செய்தி சுற்று வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. 4 கைகள், 4 கால்கள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தையைப் பார்க்க முதியோர் இல்லத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். சிலர் இக்குழந்தையை ஒரு தெய்வீக அவதாரம் என்று கூறினர்.