உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்! ஜெர்மனி – பிரான்ஸிற்கு கிடைத்த இடம்
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்! ஜெர்மனி – பிரான்ஸிற்கு கிடைத்த இடம்உலகிலேயே சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பல உள்ளன. அவை அனைத்து ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது எனலாம்.
அதாவது ஒரு கடவுச்சீட்டு வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று தான் பார்க்க முடியும்.
அந்த வகையில் எந்த முதல் 10 நாட்டிற்குள் ஜெர்மனிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதிய பட்டியலுக்கமைய, இந்த பட்டியலில் ஜப்பான் முதலாம் இடத்தை பிடித்துள்ளதுடன் ஜெர்மனி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
ஜப்பான் கடவுசீட்டை கொண்டு 193 நாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்துள்ள சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 192 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
மூன்றாம் இடத்தை பிடித்துள்ள ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
நான்காம் இடத்தை பிடித்துள்ள பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் நாடுகளின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
ஐந்தாம் இடத்தை பிடித்து ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் நாடுகளின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 188 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இந்த பட்டியலில் பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், பிரித்தானியா ஆகிய நாடுகள் 6ஆம் இடத்தை பிடித்துள்ள நிலையில் அந்த நாடுகளின் கடவுசீட்டை பயன்படுத்தி 187 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.