கனடாவில் உலுக்கும் பாதிப்பு – ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து
கனடாவில் தொடர்ச்சியாக காட்டுத்தீ பரவும் நிலையில் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்திலும் பரவ ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கே கியூபெக் மாநிலம் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கவிருக்கிறது.
கனடாவில் பரவும் காட்டுத் தீயால் வட அமெரிக்க நகரங்களில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. கூடுதல் வளங்கள் வந்துசேர்வதால் காட்டுத் தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் கடுமையான காட்டுத் தீப் பருவம் நீடிக்கிறது. அதைச் சமாளிக்க உலக நாடுகள் அங்கு தீயணைப்பாளர்களை அனுப்பி வைத்துள்ளன. கனடாவில் இந்த ஆண்டு 2,300க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றியெரிகிறது.
கியூபெக், ஒன்டாரியோ மாநிலங்களில் வார இறுதியில் மழை பெய்யக்கூடும். ஆனால், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அது எந்த அளவு பயனளிக்கும் என்று தெரியவில்லை.
காற்றின் திசை மாறுவதால் ஒட்டாவா, டொரொண்டோ, நியூயோர்க், வொஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் வார இறுதி வரை புகைமூட்டம் நீடிக்கக்கூடும்.