வேலைநிறுத்தத்தை அறிவித்த ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் : சிக்கலில் பயணிகள்‘!
ஹீத்ரோ விமான நிலையத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியிலும் ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதி வரை வெளிநடப்புக்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுனைட்டின் உறுப்பினர்கள் ஊதியம் தொடர்பான நீண்டகால சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இது பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட போராட்ட உத்தியை கையில் எடுத்துள்ளனர்.
ஜூன் 24 முதல், 2,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் இணைந்து 31 நாட்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்கள் அறிவித்துள்ளதன்படி,
• ஜூன் 24, 25, 28, 29 மற்றும் 30
• ஜூலை 14-16, 21-24 மற்றும் 28-31
• ஆகஸ்ட் 4-7, 11-14, 18-20 மற்றும் 24-27 ஆகிய காலப்பகுதியில் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
“வேலைநிறுத்த இடையூறுகளை குறைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.