கஜேந்திரகுமார் எம்.பி சற்று முன்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து சற்ற முன்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உறுதிப்படுத்தினார்.
காலை 6.30 அளவில், பொலிஸார் தமது இல்லத்திற்கு வந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், இது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பொலிஸார் தொடர்ந்தும் அவரது இல்லத்தின் வளாகத்தில் இருந்து வெளியேறாமல், அவரை கைதுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
(Visited 12 times, 1 visits today)