கனடாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி – அதிகாரிகள் எச்சரிக்கை
கனடாவில் காட்டுத்தீச் சம்பவங்களை எதிர்நோக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய கோடைக்காலத்தில் மோசமான நிலைமையை எதிர்நோக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
கனடாவில் வெப்பமான, வறண்ட வானிலை தொடர்வதால் காடுகள் பற்றி எரிகின்றன. கனடாவின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வட்டாரங்களிலும் தீ எரிந்துகொண்டிருக்கிறது.
குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவுகிறது. நோவா ஸ்கோஷியா, கியூபெக் வட்டாரங்களில் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது.
நேற்று முன்தின நிலவரப்படி சுமார் 3.3 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதி தீக்கிரையானது. காட்டுத்தீயால் வழக்கமாகப் பாதிக்கப்படும் பரப்பளவின் பத்து ஆண்டு சராசரியைவிட அது 13 மடங்கு அதிகமாகும்.
ஒகஸ்ட் மாத இறுதி வரை காட்டுத்தீச் சம்பவங்கள் நீடிக்கும் என்று அதிகாரிகள் முன்னுரைக்கின்றனர்.