சீனாவில் பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

சீனாவில் பல்கலைக்கழகங்கள் திடீரென கட்டணங்களைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர்கல்விக்கான அரசாங்கத்தின் பண ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதால் அந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
சீனாவில் பல்கலைக்கழகங்கள் அரசாங்க நிதியை அதிகம் சார்ந்திருக்கின்றன. அவை அனைத்தும் கிட்டத்தட்ட பொதுப் பல்கலைகள்.
ஷங்ஹாய் நகரில் உள்ள ஈஸ்ட் சீனா அறிவியல், தொழில்நுட்பப் பல்கலை சில துறைகளுக்கான கட்டணத்தை 54 விழுக்காடு உயர்த்தியிருக்கிறது.
ஷங்ஹாய் நகரில் பல்கலைக்கழகக் கட்டணம் உயர்த்தப்படுவது 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.
சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கல்வி அமைச்சின் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3.7 சதவீதம் சரிந்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)