ஆந்திராவில் 3 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர்
ஆந்திராவின்(Andhra) நந்தியால்(Nandyal) மாவட்டத்தில் ஒரு நபர் தனது மூன்று மகன்களைக் கொன்றுவிட்டு பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கலாம் இது அந்த நபரை இந்த தீவிர நடவடிக்கைக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்று அல்லகட்டாவின்(Allakata) துணை காவல் கண்காணிப்பாளர் கே. பிரமோத் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் அந்த நபரின் மனைவி தூக்குப்போட்டு இறந்ததாகவும் இது குடும்பத்தின் துயரத்தை அதிகரித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகளின் இறப்புக்கான சரியான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் விசாரணைக்குப் பிறகு மேலும் விவரங்கள் வெளிவரும் என்றும் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார்.





