பதின்ம வயதில் நேர்ந்த கொடூரம்: பிபிசி வானொலியில் அரசி கமிலா உருக்கமான வாக்குமூலம்
பிரித்தானிய அரசி கமிலா, தனது பதின்ம வயதில் இரயிலில் பயணம் செய்தபோது பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக முதன்முறையாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிபிசி (BBC) வானொலியில் ஒளிபரப்பான பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த ஜூலை மாதம், தனது மனைவி மற்றும் இரு மகள்களைப் பறிகொடுத்த பிபிசி வர்ணனையாளர் ஜோன் ஹண்டின் (John Hunt) துணிச்சலான போராட்டமே, நீண்டகாலமாக மறைத்து வைத்திருந்த தனது வலியைப் பேசத் தூண்டியதாக அரசி குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவனை எதிர்த்து தான் போராடியதாகவும், இச்சம்பவம் குறித்து அன்று தனது தாயிடம் கூறியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் தவறான கருத்துக்களைத் தடுத்து, பாடசாலைக் காலத்திலிருந்தே பெண்களுக்கு மரியாதை அளிக்கும் கல்வியைப் புகட்ட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்





