அரசியல் இலங்கை செய்தி

டக்ளசுக்கு வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள் குறித்து தீவிர விசாரணை!

“முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa. தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது.

இதன்போது டக்ளஸ் தேவானந்தா கைது கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவாலேயே துப்பாக்கி தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 காலப்பகுதியில் ரி- 56 துப்பாக்கிகள் 13 மற்றும் ஆறு பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று மட்டுமே என்னால் குறிப்பிட முடியும்.

கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.” – என அமைச்சர் மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!