டக்ளஸ் தேவானந்தா மருத்துவமனையில் அனுமதி!
சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி தொடர்பான சம்பவம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கடந்த 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





