உலகம் செய்தி விளையாட்டு

நைஜீரியாவில் ஜோஷுவா கார் விபத்து

முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ஆந்தனி ஜோஷுவா (Anthony Joshua), நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 29) நிகழ்ந்த கோர கார் விபத்தில் சிக்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

லாகோஸ் – இபாடன் அதிவேக நெடுஞ்சாலையின் மாகுன் பகுதியில் அவர் பயணித்த லெக்ஸஸ் ரக சொகுசு கார், வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆந்தனி ஜோஷுவாவின் கார் ஓட்டுநர் மற்றும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜோஷுவாவுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காரின் டயர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் மியாமியில் நடந்த போட்டியில் ஜேக் பாலை (Jake Paul) ஆறாவது சுற்றில் வீழ்த்தி பெரும் வெற்றியைப் பதிவு செய்த ஜோஷுவா, தனது விடுமுறையைக் கழிப்பதற்காக நைஜீரியா சென்றிருந்த போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

2012 ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளரான ஜோஷுவா, அடுத்த ஆண்டு டைசன் பியூரியுடன் (Tyson Fury) மோதுவதற்குத் தயாராகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!