இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு எமனாக மாறியுள்ள “வாகன விபத்து”! நூற்றுக்கணக்கானோர் பலி!

இலங்கையில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இம்முறை அதிகரித்துள்ளது.

2025 ஜனவரி முதல் இதுவரையில் வீதி விபத்துகளால் 2 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது.

கொழும்பில் இன்று (29) போக்குவரத்து பொலிஸாரால் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர முக்கிய பல தகவல்களை வெளியிட்டார்.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 545 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துகளின் எண்ணிக்கை 272 ஆக அதிகரித்துள்ளது.

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு பிரதானமான காரணமாக உள்ளது.

அதேவேளை, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!