உஸ்மான் ஹாடி கொலையில் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் இந்தியாவிற்கு தப்பியோட்டம்
வங்கதேச(Bangladesh) அரசியல் ஆர்வலர் ஒஸ்மான் ஹாடி(Osman Hadi) கொலையில் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் எல்லையைக் கடந்து மேகாலயாவிற்கு(Meghalaya) தப்பிச் சென்றுள்ளதை டாக்கா(Dhaka) பெருநகர காவல்துறை(DMP) உறுதிப்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து நாடு கடத்துவதை உறுதி செய்வதற்காக, இந்திய அதிகாரிகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து வருவதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்கள் ஃபைசல் கரீம் மசூத்(Faisal Karim Masood) மற்றும் ஆலம்கீர் ஷேக்(Alamgir Sheikh) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உள்ளூர்வாசிகளின் உதவியுடன், மைமென்சிங்கில்(Mymensingh) உள்ள ஹலுகாட்(Halukhat) எல்லை வழியாக இருவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தப்பிச் செல்ல உதவிய பூரிதி(Puriti) மற்றும் சாமி(Sami) ஆகிய இருவரையும் இந்திய பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே கைது செய்துள்ளதாக வங்கதேச அதிகாரிகளுக்கு முறைசாரா உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
வங்கதேச மாணவர் எழுச்சித் தலைவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்




