தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் மரணம் – இருவர் மாயம்
ஸ்பெயினின்(Spain) தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இருவர் காணாமல் போயுள்ளனர்.
மலகாவில்(Malaga) வெள்ளத்தில் ஒரு வேன் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் வேனில் இருந்த இரண்டாவது பயணி இன்னும் காணவில்லை என்றும் ஸ்பெயினின் சிவில் காவல்படை தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, கிரனாடாவில்(Granada) மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அடித்து செல்லப்பட்டதாகவும் அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தில் 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து பில்லியன் கணக்கான யூரோக்கள் சேதம் ஏற்பட்ட வலென்சியாவில்(Valencia), மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும் உயரமான இடங்களில் இருக்கவும் வலியுறுத்தி அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
மேலும், மற்ற எட்டு மாகாணங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.





