மான்செஸ்டரில் சிறுமியை வாகனத்தில் மோதிய போதைப்பொருள் குற்றவாளி கைது
மான்செஸ்டரில் மூன்று வயது சிறுமியை வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றவாளியான ராவல் ரெஹ்மான் (Rawal Rehman) (37), சம்பவத்துக்குப் பின்னர் லங்காஷயரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த அவரை, கிரேட்டர் (Grater) மான்செஸ்டரின் விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்திற்கு முன் ரெஹ்மான் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாக கூறப்படுகிறது.
விபத்தின் போது சிறுமி உயிரிழந்த பின்னர் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.





