அவசரகால நிலைமை நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுப் பாதுகாப்பு, நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






