சான் பிரான்சிஸ்கோ நகரையே ஸ்தம்பிக்கவைத்த வேமோ ரோபோடாக்சிகள்- கரணம் இதுவா?
டிசம்பர் 20, 2025 அன்று சான் பிரான்சிஸ்கோ (SAN FRANCISCO) நகரின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் மின்தடை. இது அந்த நகரின் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பைச் சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அந்த நகரில் ஒரு துணை மின்நிலையத்தில் (PG&E substation) ஏற்பட்ட தீ விபத்தால் நகரின் மூன்றில் ஒரு பகுதி இருளில் மூழ்கியது. சுமார் 130,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டன.
மேலும் இந்த மின்தடையால் நூற்றுக்கணக்கான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் (Traffic Lights) செயலிழந்தன.
வழக்காகச் சிறப்பாக இயங்கும் வேமோவின் தானியங்கி கார்கள், (Waymo Robotaxis) போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் (Traffic Lights) வேலை செய்யாததால் குழப்பமடைந்து குறுக்குச் சாலைகளிலேயே நின்றுவிட்டன. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் (Traffic Lights) அணைந்திருக்கும் போது, வேமோ கார்கள் (Waymo Robotaxis) அதை ‘நான்கு வழி நிறுத்தம்’ (Four-way stop) என எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவற்றின் வழிகாட்டுதல். ஆனால் அவை பாதுகாப்பு கருதி, பல கார்கள் ஒரே நேரத்தில் தலைமையகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு அதிகாரிகளின் வழிகாட்டுதலை கோரின. இதனால் அதிகப்படியான கோரிக்கைகள் குவிந்தன. அதன் விளைவாக கார்கள் நீண்ட நேரம் அசையாமல் நின்றுள்ளன.
மின்தடையால் மக்கள் வைஃபை (Wi-Fi) வசதியை இழந்து, தங்களது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட இணைய நெரிசலால், கார்களுக்கும் தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு குறைவானது.

இச்சம்பவத்தன்று இரவு வேமோ (Waymo Robotaxis ) தனது சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியது. அடுத்த நாள் மின்சாரம் வந்த பிறகு மீண்டும் சேவை தொடங்கியது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மின்தடை போன்ற அசாதாரண சூழல்களைக் கையாளும் வகையில் புதிய மென்பொருள் அப்டேட்களை (Software Updates) வேமோ (Waymo Robotaxis) அறிமுகம் செய்யவுள்ளது. இதனால் கார்கள் மனித உதவியின்றி இத்தகைய சூழலில் முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனா ல் மக்களிடையே எழுந்துள்ள பெரிய கேள்வி என்னவெனில் நிலநடுக்கம் அல்லது வெள்ளம் போன்ற பெரிய இயற்கை பேரிடர்களின் போது, இந்த ரோபோடாக்சிகள் (Robotaxis) அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் முடங்கிப் போனால் என்னவாகும் என்பது மாற்று இல்லாமல் அச்சத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





