டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு இவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மாகந்துர மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து முறையான விளக்கமளிக்கத் தவறிய நிலையிலேயே கடந்த 26 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய தினம் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலதிக துப்பாக்கிகள் எங்கே என்பது குறித்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.




