மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் நடைபெறும் முதலாவது தேர்தல் இன்று!
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 05 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டின் பெரும்பகுதி முழுவதும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதன் இராணுவ அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கூன், தலைநகர் நேபிடாவ் மற்றும் பிற இடங்களில் வாக்காளர்கள் உயர்நிலைப் பாடசாலைகள், மதக் கட்டிடங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.
இராணுவ ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வமான தோற்றத்தைச் சேர்க்க இந்தத் தேர்தல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முக்கிய கட்சிகள் விலக்கப்படுவதாலும், பேச்சு சுதந்திரத்தின் மீதான வரம்புகள் மற்றும் அடக்குமுறை சூழல் காரணமாகவும் முடிவுகள் சட்டபூர்வமான தன்மையை இழக்கும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





