குண்டு வீச்சுக்கு திட்டம் : 06 பேர் கைது!
சீதுவயில் உள்ள இரவு விடுதியொன்றில் பெட்ரோல் குண்டுவீச்சி தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த ஆறு நபர்கள் ஆறு பெட்ரோல் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு விடுதியின் மேலாளர், ஒரு தொழிலதிபர் மற்றும் மூன்று முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அடங்குவர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





