குவியும் சர்வதேச உதவிகள் குறித்து இலங்கை திருப்தி!
“ இலங்கையானது (srilanka) நிச்சயம் மீண்டெழும். இருந்தநிலையைவிட நிச்சயம் நாம் சிறந்த நிலைக்கு முன்னோக்கி செல்வோம்.”
– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் (cabinet Spokesperson), அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கை மீண்டெழுவதற்காக சர்வதேச நாடுகள் தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கிவருகின்றன.
இலங்கைமீது சர்வதேச சமூகத்துக்கு (international community) நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வாறு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.
இதன்மூலம் இலங்கையை இருந்த இடத்தைவிட சிறந்த நிலைக்கு கொண்டுவருவதற்கே நாம் முயற்சிக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதாரம் ஸ்தீரப்படுத்தப்பட்டது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தில் இருந்த கறுப்புகரை நீக்கப்பட்டது.
இந்நிலையில் டித்வா புயலால் (ditwa cyclone) எமது நாட்டு பொருளாதாரத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இலங்கையை மீண்டெழ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.





