சோமாலிலாந்தை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்
சோமாலிலாந்தை(Somaliland) முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல்(Israel) மாறியுள்ளது.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
“இன்று சோமாலிலாந்து குடியரசை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) அறிவித்துள்ளார்” என்று அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது
மேலும், சோமாலிலாந்து ஜனாதிபதி அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி(Abdirahman Mohamed Abdullahi) இந்த நடவடிக்கையைப் பாராட்டி, இது ஒரு மூலோபாய கூட்டாண்மையின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்குப் பிறகு சோமாலியாவின்(Somalia) பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த நடவடிக்கை நாட்டின் இறையாண்மையின் மீதான தாக்குதல் என்றும் சட்டவிரோத நடவடிக்கை என்றும் சோமாலிலாந்தை சோமாலியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1991ல் சோமாலியாவிலிருந்து சுதந்திரம் அறிவித்த சோமாலிலாந்து, பல தசாப்தங்களாக சர்வதேச அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.





