UKவில் அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள் – விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை!
பிரித்தானியா முழுவதும் இடம்பெறும் கார் திருட்டை சமாளிப்பதற்காக பிரத்தியேக காவல்துறை பிரிவை நிறுவ வேண்டும் என்ற அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கார் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கால்வாசிக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, 2024-25 நிதியாண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 121,825 மோட்டார் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், சுமார் 92,958 விசாரணைகளில் ஒன்றுக்கூட நிறைவுப் பெறாமல் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்க்கப்படாத வழக்குகளில் பெருநகர காவல்துறை அதிகபட்ச விகிதத்தைப் பதிவு செய்துள்ளது, தலைநகரில் நடந்த கார் திருட்டுகளில் 88.5 சதவீதம் கவனிக்கப்படாமல் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் (Wales) உள்ள 44 படைகளில் 35 படைகளின் கார் திருட்டு விசாரணைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் இல்லாமல் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே புதிய காவல்துறை பிரிவை நிறுவ வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





