டெல்லியில் அபாயகரமான அளவில் வளி மாசுபாடு: 407 ஆகப் பதிவு
இந்தியத் தலைநகர் டெல்லியில் வளி மாசுபாடு இன்று 407 என்ற மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
நத்தார் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு சாலைகளில் அதிகரித்த வாகன நெரிசலே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
டெல்லியின் வளி மாசுபாட்டிற்கு 40 சதவீதக் காரணம் வாகனப் புகை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிலை தொடர்ந்தால் பாரதூரமான பொதுச்சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் இது இந்தியாவின் மிகக்கடுமையான நுரையீரல் சார்ந்த சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





