அரசியல் இலங்கை செய்தி

அன்று பிரிட்டனுக்கே கடன் வழங்கியது இலங்கை : இன்று யாசகம் பெறும் நிலை!

“ 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் வழங்கிய நாடுதான் இலங்கை. ஆனால் இன்று வெளிநாடுகளிடம் யாசகம் பெறும் நிலைமையே காணப்படுகின்றது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) சிரேஷ்ட உப தலைவரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கை தன்னிறைவடைந்திருந்தது. யாசகம் பெற்று வாழவில்லை. ஏனைய நாடுகளில் தங்கி இருக்கவும் இல்லை.

2000 வருடங்கள் இந்நிலைமையே காணப்பட்டது. கடைசி மன்னின் ஆட்சிகாலமான 1815 இலும் இலங்கை தன்னிறைவடைந்த நாடாகவே இருந்தது.

உணவு, ஆயதம் எல்லாம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. வெளிநாடுகளிடம் யாசகம் பெறவில்லை. ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

2ஆம் உலகப்போரின்போது நாம் இங்கிலாந்துக்கு கடன் கொடுத்தோம். ஜேர்மனியுடன் போர் செய்வதற்கே இவ்வாறு கடன் வழங்கப்பட்டது.

முக்கிய நீர்பாசன திட்டங்கள் எல்லாம் அரச பணத்திலேயே நிர்மாணிக்கப்பட்டன.

1950 இற்கு பிற்பட்ட காலத்திலேயே கடன் பெறும் நிலை காணப்பட்டது. உறுதிமொழி வழங்கும் அரசியல் தோற்றம் பெற்றதால்தான் இந்நிலைமை ஏற்பட்டது.

எனவே, இனி பொய்கூறி ஆட்சிக்குவரும் நடைமுறை எமது நாட்டுக்கு பொருந்தாது. உண்மையை கூறாவிட்டால் ஆட்சியில் நீடித்திருக்கவும் முடியாது.”- என்றார் லக்ஸ்மன் கிரியல்ல.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!