மோசடி, துஷ்பிரயோக குற்றச்சாட்டு – வெளிநாட்டு தத்தெடுப்புக்களை நிறுத்திய தென்கொரியா!
வெளிநாட்டவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதை நிறுத்தவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
வெளிநாட்டு தத்தெடுப்புகளுடன் தொடர்புடைய பரவலான மனித உரிமை மீறல்களை கண்டறிதல் மற்றும் இழப்பீடுகளை உறுதி செய்வதில் சியோல் தோல்வியடைந்ததாக ஐ.நா விமர்சித்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு அனுப்பட்ட குழந்தைகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக புலனாய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஐ.நா மட்டத்தில் குறைவாக விசாரணை செய்யப்பட்டாலும், தென்கொரியா மோசடி மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான அழுத்தங்களை எதிர்கொள்கிறது.
1970கள் மற்றும் 1980களில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இருப்பினும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை அடுத்து சுகாதாரம் மற்றும் நலன்புரி துணை அமைச்சர் லீ சியூரன் (Lee Seuran), ஐந்து வருட காலத்திற்குள் வெளிநாட்டு தத்தெடுப்புகளை படிப்படியாக நிறுத்துவதாகவும், 2029 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையே தென் கொரியா 2025 ஆம் ஆண்டில் 24 குழந்தைகளின் வெளிநாட்டு தத்தெடுப்புகளுக்கு ஒப்புதல் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





