ரஷ்யாவில் மதுபானம் அருந்திய 16 பேர் மரணம் – ஆபத்தான நிலையில் 19 பேர்

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள Ulyanovsk நகரில் மதுபானம் அருந்திய 16 பேர் மரணமடைந்ததாக நகரின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
35 பேர் நோய்வாய்ப்பட்டதாகவும் அவர்களில் 19 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“Mister Cider” எனும் மதுபானம் மாசுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அதில் மெத்தனால் நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருந்தது என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.
அதிகாரிகள் மதுபானங்களைப் பறிமுதல் செய்வதாக ஆளுநர் தெரிவித்தார். அத்தகைய சம்பவங்கள் ரஷ்யாவில் வழக்கமானவை.
அங்குள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் மலிவான மதுபானங்களை நாடுகின்றனர். சம்பவத்தை ரஷ்ய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
(Visited 13 times, 1 visits today)