சிட்னியில் போராட்டங்களுக்குத் தடை: காவல்துறைக்கு அதிரடி அதிகாரம் வழங்கிச் சட்டத் திருத்தம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொது இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு மூன்று மாதங்கள் வரை தடை விதிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
போண்டி (Bondi) பகுதியில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றம் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, முதற்கட்டமாக 14 நாட்களுக்குப் போராட்டங்களைத் தடை செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் காவல்துறை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை நிலைமையை மீளாய்வு செய்து, அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை இந்தத் தடையை நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இரு வாரத் தடை காரணமாக, போராட்டங்களுக்கு அனுமதி கோரி எந்தவொரு தரப்பும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.





