ஐரோப்பா செய்தி

போரில் முன்னேறி வரும் ரஷ்யா : கிழக்கு நகரை இழந்த உக்ரைன்!

உக்ரைனுடனான போரில் ரஷ்யா முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிழக்கு நகரமான சிவர்ஸ்கில் (Siversk) இருந்து உக்ரேனிய துருப்புக்கள் பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய இராணுவம், எங்கள் வீரர்களின் உயிரையும், பிரிவுகளின் போர் திறனையும் பாதுகாக்க” செயல்பட்டதாக கூறியுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் வசம் எஞ்சியுள்ள  டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் அமையப் பெற்றுள்ள இரண்டு நகரங்களையும் ரஷ்ய படையினர் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கிறிஸ்துமஸ் நெருங்கி வருகின்ற நிலையிலும் ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது.  கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் இந்த ஆண்டில் சாத்தியப்படாது எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!