இரு குழந்தைகளைக் கொன்று லண்டனுக்குத் தப்பிய தாய்; அமெரிக்காவிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து
அமெரிக்காவில் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பியோடிய கிம்பர்லீ சிங்லர் என்ற பெண், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மீண்டும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு கொலராடோவில் உள்ள தனது வீட்டில் 9 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, லண்டனில் தலைமறைவாக இருந்தபோது இவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் கணவருடனான பிணக்கு காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தாக்குதலில் அவரது மூத்த மகள் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஓராண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது கொலராடோ கொண்டுவரப்பட்டுள்ள கிம்பர்லீ மீது, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.





