இந்திய பயணத்தால் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த வருமானம்?
கொல்கத்தாவில்(Kolkata) ஒரு குழப்பமான வரவேற்புடன் தொடங்கிய அர்ஜென்டினா(Argentine) கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின்(Lionel Messi) மூன்று நாள் இந்தியப் பயணத்திற்காக அவர் பெற்ற கட்டணத்தை அவரது சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது கொல்கத்தா, ஐதராபாத்(Hyderabad), மும்பை(Mumbai), டெல்லியில்(Delhi) நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரெஸ்(Luis Suarez) மற்றும் ரோட்ரிகோ டி பால்(Rodrigo de Paul) ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கொல்கத்தா சால்ட்லேக்(Salt Lake) மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் குழப்பம் ஏற்பட்டது. காரணம், 10 முதல் 15 நிமிடங்களிலேயே மெஸ்ஸி மைதானத்தை விட்டு புறப்பட்டதால் 15,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி காத்திருந்த ரசிகர்கள் அவரை சரியாக பார்க்க முடியாத விரக்தியில் மைதானத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
இந்நிலையில், சுற்றுலா ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மெஸ்ஸிக்கு ₹890 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் அதே நேரத்தில் இந்திய அரசாங்கம் ₹110 மில்லியன் வரிகளைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





