ஜெருசலேமில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸ் தலைவர்களை சந்திக்கும் நெதன்யாகு
இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu), ஜெருசலேமில்(Jerusalem) கிரேக்க(Greek) பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ்(Kyriakos Mitsotakis) மற்றும் சைப்ரஸ்(Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ்(Nikos Christodoulides) ஆகியோரை சந்திக்க உள்ளார் என்று இஸ்ரேலின் அருட்ஸ் ஷேவா(Arutz Sheva) ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரு தலைவர்களுடனும் தனி தனி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
துருக்கியின்(Turkey) விரிவடைந்து வரும் இராணுவ நிலைப்பாடு குறித்து ஏதென்ஸில்(Athens) அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், கிழக்கு மத்தியதரைக் கடலில் ஒரு கூட்டு விரைவான இராணுவப் படையை உருவாக்குவது குறித்து மூன்று நட்பு நாடுகளும் ஆலோசிக்கவுள்ளதாக அருட்ஸ் ஷேவா செய்தி வெளியிட்டுள்ளது.





