வங்கதேசத்தில் இந்து நபர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் விரைவு நடவடிக்கை பட்டாலியன் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, மைமென்சிங்(Mymensingh) நகரில் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ்(Thibu Chandra Das) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
காவல்துறையின் கூற்றுப்படி, தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர தாஸ் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசி குற்றச்சாட்டுகளுக்காக தொழிற்சாலைக்கு வெளியே ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.





